
வர்மக்கலை மருத்துவம்
ஆதியிலே முருகப்பெருமானால் உபதேசிக்கப்பட்ட அற்புதமான கலைகளில் ஒன்றான வர்மக்கலை மருத்துவத்தில் உடலிலுள்ள 170 வர்ம புள்ளிகளை தெளிவாக தொட்டுக்காட்டி அதனுடைய இயக்கு முறைகளையும் பயன்களையும் கூறுதல், மற்றும் எந்தெந்த நோய்களுக்கு எந்தெந்த வர்மங்களை இயக்கவேண்டும் என்பதனையும் கற்று தருதல், மேலும் தண்டுவட கோளாறுகள், கழுத்து எலும்பு பிரச்சனைகள், இடுப்பு எலும்பு பிரச்சனைகள், மூட்டு பிரச்சனைகள், நரம்பு மண்டல கோளாறுகள் இவைகளுக்கு உடலில் நெட்டி வாங்கி வர்மக்கலை தடவல் செய்யும் இரகசிய முறைகளை கற்று தருதல், மேலும் வர்மக்கலைக்கு பயன்படும் மூன்று முக்கியமான தைலம் காய்ச்சும் முறைகளை நேரடியாக செய்து காட்டுதல், ஒற்றடம்,பட்டி முறைகளில் உள்ள இரகசியங்களை கற்று தருதல் ,மற்றும் அனைத்துவிதமான வலிகள், முதுகெலும்பு பிரச்சனைகள் ,மூட்டு பிரச்சனைகள், நரம்பு பிரச்சனைகள், அடிபட்டதால் ஏற்படும் பிரச்சனைகள் ஆகியவற்றிற்கு முறையான வர்மக்கலை சிகிச்சையும் நமது குருகுலத்தில் அளிக்கப்படும்.