நாடிதுடிப்பின் எண்ணிக்கை வயதிற்கேற்ப மாறுதல் அடையும், அதாவது ஒரு நிமிடத்திற்கு பிறந்த குழந்தையின் துடிப்பு 140, குழந்தைகளுக்கு 100, பாலபருவத்தில் 120 முதல் 130 வரை,வாலிப வயதில் 90,முழுப்பருவ ஆணுக்கு70 முதல் 75,முழுப்பருவ பெண்ணுக்கு 75 முதல் 80 வரை,தளர்ந்த பருவத்தில் 80 ,வயதானபின் 75, மற்றும் அமர்ந்திருந்தால் 40, நின்றால் 79,படுக்கையில் 67 தடவையும் சாதாரணமாக நாடி துடிக்கும், இதில் கோதுமையளவு ஒரு மாத்திரை வாத நாடியும் ,அரை மாத்திரையளவில் பித்த நாடியும்,கால் மாத்திரையளவில் கப நாடியும் நடத்தலே நலமாகும்,இதில் காணும் மாறுதல்களினால் நோயினை கணித்து அறியலாம்.
நாடித்துடிப்பினை சித்திரை வைகாசியில் உதயத்திலும்,ஆனி ஆடி ஐப்பசி கார்த்திகையில் மதியத்திலும்,மார்கழி மாசியில் மாலையிலும்,பங்குனி ஆவணி புரட்டாசியில் இரவிலும் முறையே தெளிவாக அறியலாம், மேலும் காலை 6 மணிமுதல் 10 வரை வாதமும்,10 முதல் 2 வரை பித்தமும் ,2 முதல் 6 வரை கபமும் மிக்க எழுச்சியுடனிருக்கும்,ஆகவே அந்தந்த நேரத்தில் அவ்வவ்வற்றை கண்டறிதல் சுலபமாகும் ,இங்கனமே மாலை 6 மணிமுதல் காலை 6 மணிவரை உள்ள இரவு நேரத்திற்கும் கிரமப்படி கண்டறிதல் வேண்டும்.
நன்றி
தலைமை வர்மக்கலை ஆசான்
எஸ். கோபாலகிருஷ்ணன்
9894285755.

Commentaires