வன மூலிகைகள் எதுவாயினும் அதன் சாபத்தை நிவர்த்தி செய்ய வேண்டுமாயின் தான் பிறந்த கிழமையும் நட்சத்திரமும் ஒன்று கூடும் தினம் பார்த்து நமக்கு வேண்டிய மூலிகையின் அருகில் சென்று 'நங் மங் நமசிவய' என்று 108 உரு செபித்து அம்மூலிகையின் வேரைப்பிடுங்குவதோ இலைகளை பறிப்பதோ நன்று,கீழே குறிப்பிட்டபடி மூலிகைக்கு உயிர் கொடுத்து நகம் படாமல் பறித்திட நன்மைபயக்கும் ,மூலிகைக்கு உயிர் கொடுக்கும் முறை மூலிகை இருக்கும் இடத்தை சுத்தம் செய்து மஞ்சள் நீர் தெளித்து மேலே கூறியபடி மந்திரம் செபித்து அதற்கு மூவர்ண காப்பு கட்டி(சிவப்பு ,கருப்பு ,பச்சை,) தீப தூபம் காட்டி தேங்காய் உடைத்து பூசணிக்காய் பலி கொடுத்து பால்பொங்கல் படையலிட்டு 'ஓம் சர்வ மூலி சாபநிவர்த்தி, உனதுடலில் உயிர் நின்று என்னைக் காக்க சுவாகா' என்று 108 உரு கொடுத்து மூலிகையை பிடுங்கி வந்தால் சகல வேலைகளுக்கும் உபயோகப்பட்டு நமக்கு நற்கதியை அளிக்கும்.
நன்றி
தலைமை வர்மக்கலை ஆசான்
எஸ். கோபாலகிருஷ்ணன்

நன்றி