" விளக்கு திரி "
★பஞ்சுத்திரி-வீட்டில் மங்களம் நிலைக்கும்
★தாமரைதண்டுதிரி-முன்வினை பாவம் நீக்கும்,செல்வம் தரும்
★வாழைத்தண்டுதிரி-தெய்வகுற்றம் நீங்கி மனச்சாந்தி தரும் புத்திரப்பேறு உண்டாகும்
★வெள்ளெருக்கன் பட்டைதிரி-வறுமையைப்போக்கும் கடன் தொல்லை தீரும் பெருத்த செல்வம் சேரும்
" விளக்கு திசை "
★வடக்கு-தொழில் அபிவிருத்தி செல்வம் சேரும்
★கிழக்கு-சகல சம்பத்தும் கிடைக்கும்
★மேற்கு-கடன் தீரும் நோய் அகலும்
★தெற்கு-இந்த திசையில் தீபம் ஏற்ற கூடாது
" விளக்கு எண்ணை "
★பசுநெய்-மோட்சம் கிடைக்கும் பாவங்கள் தீரும் மகாலட்சுமி அருள் கிடைக்கும்
★ஆமணக்கெண்ணை-குடும்ப சுகம் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்
★இலுப்பையெண்ணை-குலதெய்வ அருள் கிடைக்கும் முன்னோர் சாபங்கள் முற்பிறவி பாவங்கள் தீரும்
★நல்லெண்ணை-கடன்கள் தீரும் நோய்கள் அகலும்
★தேங்காயெண்ணை-வினாயகருக்கு மட்டும் தான் இதில் தீபம் ஏற்ற வேண்டும் திருமண தடை நீங்கும்
★முக்கூட்டு எண்ணெய்-பசுநெய் ஆமணக்கெண்ணை இலுப்பையெண்ணை மூன்றும் சம அளவில் கலந்து தீபம் ஏற்றுவதால் தேவ ஆகர்ஷணம் குடும்பத்தில் அமைதி உண்டாகும் செல்வம் சேரும் பசுநெய்யுடன் நல்லெண்ணெய் கலக்க கூடாது கடலையெண்ணை சன் ஆயில் கலப்பு எண்ணை கொண்டு தீபம் ஏற்றினால் தரித்திரம் உண்டாகும் தெய்வசாபம் வரும்.
★ பசுநெய் ஆமணக்கெண்ணை வேப்பெண்ணை இலுப்பையெண்ணை தேங்காயெண்ணை இவ்வைந்தெண்ணை சேர்த்து விளக்கிட்டு ஒரு மண்டலம் பூஜை செய்துவர தேவியின் அருள் சக்தி உண்டாகும்.
நன்றி
தலைமை வர்மக்கலை ஆசான்
எஸ்.கோபாலகிருஷ்ணன்
நன்றி